இலங்கையில் தற்கொலைகள் குறைந்துள்ளன – சுகாதார சேவைகள் பணியகம் தகவல்!

இலங்கையில் கடந்த காலங்களை விட தற்பொது
தற்கொலைகள் இடம்பெறுவது குறைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
உலக தற்கொலைத் தடுப்பு தினத்தை முன்னிட்டு தற்கொலை தொடர்பில் ஊடகவியலாளர்கள் அறிக்கையிட வேண்டிய முறை தொடர்பில் அறிவூட்டும் வகையில் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த காலங்களில் தற்கொலைகள் அதிகமாக இடம்பெறும் நாடாக இலங்கை பதிவாகியது. ஆனால் தற்போது அது குறைந்துள்ளதாக குறிப்பிட்ட அவர் கடந்த ஆண்டில் 3263 தற்கொலைகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் இவ்வாறான சம்பவங்களை முற்றாகக் கட்டுப்படுத்துவதற்கு ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.