அநுராதபுரத்தில் மனித எச்சங்கள் மீட்பு!

அநுராதபுரம்- அசோகபுரம்  காட்டுப் பகுதியிலிருந்து, மனித எச்சங்கள்  மீட்கப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

சில மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன நபரின் மனித எச்சங்களாக இருக்கலாம்  என, சந்தேகிக்கப்படுகிறது.

பாதணி, ஆடை என்பனவும் மீட்கப்பட்டுள்ளன குறித்த பகுதியில் மீட்கப்பட்டன. இதனையடுத்து, காணாமல் ​போன நபரின் மகள் இவை தன்னுடைய தந்தையின் பொருள்கள் என, அடையாளம் காட்டியுள்ளார்.

மீட்கப்பட்ட எச்சங்கள், பரிசோதனை மேற்கொள்வதற்காக, அநுராதபுரம்  வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

#Anuradhapura,   #srilanka  #tamilnews  

No comments

Powered by Blogger.