மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட இராணுவ சிப்பாய்!

அம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் கடமையாற்றி வந்த இராணுவச் சிப்பாய் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக மீரிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது சம்பந்தமாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்த சம்பவம் இன்று அதிகாலை 4.40 அளவில் நடந்துள்ளது.

உயிரிழந்த சிப்பாய், இராணுவ முகாமில் உள்ள காவலரணில் அதிகாலை 2 மணி முதல் 4 மணி வரை கடமையில் ஈடுபட்டிருந்த போதே அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலையாளி பற்றி தகவல்கள் இதுவரை கண்டறியப்படவில்லை. கேகாலை மாவட்டம் புளத்கொவ்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 21 வயதான டப்ளியூ.எம்.என்.எஸ். ஜயசேன என்ற சிப்பாயே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

சடலம் தொடர்பான நீதவான் விசாரணைகள் நடக்கும் வரை சடலம் பொலிஸாரின் பாதுகாப்பில் கீழ் அதே இடத்தில் வைக்கப்பட்டிருந்தது. அத்தனகல்லை நீதவான் விசாரணைகளை நடத்தவுள்ளார். மீரிகம பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#kegalle  #army   #deth   #srilanka  #tamilnews

No comments

Powered by Blogger.