பொலிஸ்மா அதிபருக்கு எதிராக விசாரணைக் குழு நியமனம்"!

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார விடுத்த பணிப்புரைக்கு அமைய அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன குறித்த விசாரணைக் குழுவை நியமித்துள்ளார்.

இந்த விசாரணைக் குழுவின் அங்கத்தவர்கள் தொடர்பான விபரங்கள் இன்றைய தினம் பொது மக்களுக்கு தெரிவிக்கப்படும் என்றும் அமைச்சின் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையே பொலிஸ்மா அதிபருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விடயங்கள் குறித்து விளக்கமளிக்க இன்றைய தினம் அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார ஊடக சந்திப்பொன்றை நடத்தவுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
Powered by Blogger.