மின்கம்பத்தை அகற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பு – ஏறாவூர், ஐய்யங்கேணி ஜின்னா வீதி, ஏழாம் குறுக்குத் தெருவில் தனியார் ஒருவரின் தேவைக்காக நாட்டப்பட்டுள்ள மின்கம்பத்தை அகற்றுமாறு மக்கள் கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

ஜின்னா வீதி, ஏழாம் குறுக்குத் தெருவில் இன்று முற்பகல் 10.30 மணியளவில் இந்தக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சுமார் 125 மீற்றர் நீளமுடைய இந்த வீதியில் தனியாரின் தேவைக்காக அதிக வலுகொண்ட மின்சாரத்தை பெறுவதற்காக மின்கம்பம் நாட்டப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த வீதியூடாக கனரக வாகனங்களும் செலுத்தப்படுவதாக குற்றஞ்சாட்டுகின்ற ஜின்னா வீதி, ஏழாம் குறுக்குத் தெருவில் வசிக்கும் மக்கள் மக்கள், இதன்காரணமாக விபத்துக்களை எதிர்நோக்கவேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

#Batticaloa   #jaffna   #srilanka   #tamilnews
Powered by Blogger.