பொதுபல சேனாவிற்கும் முன்னாள் போராளிகளுக்கும் இடையில் சந்திப்பு!

பொதுபல சேனா இயக்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

ராஜகிரிய நாவல வீதியில் அமைந்துள்ள பொதுபல சேனா இயக்கத்தின் தலைமையகத்தில் இன்று மதியம் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளும், பொதுபல சேனா இயக்கத்தின் உறுப்பினர்களும் இந்த சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.

பொதுபல சேனா இயக்கத்தின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு உதவுவதாக முன்னாள் போராளிகள் ஊடக சந்திப்பின் மூலம் தெரிவித்துள்ளனர்.

இந்த சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் பற்றிய மேலதிக விபரங்கள் வெளியிடப்படவில்லை.

#srilanka   #tamilnews  #BoduBalaSena    #meeting
Powered by Blogger.