த போ க வின் வித்தகனே..!

என் தேசத்தெருக்களில்
கம்பீரமாய் உலாவந்த
த போ க வின் வித்தகனே
உன் சேவையால்
நிமிர்ந்தது தமிழினம் அன்று
பல பரிணாமம் பெற்று
A20   எனும் பெயரில்
முகமாலை தொடங்கி
புளியங்குளம் வரை
விரிவடைந்தது உன் தடங்கள்
டீசல் அறியாக்காலத்தில் கூட
மண்ணெண்ணெய் தனைக்கொண்டு
மகா வீரம் காட்டியவன் நீ
கழுத்தில் கறுப்பு நூலுடன்
உனை மறித்து ஏறி இருக்கையில்
ரிக்கற் எடுக்க வரும் பணியாளரிடம்
நாங்கள் மற்றது என
மிடுக்குடன் சொன்னது
இனித்திடும் காலம்
தலைவனின் செயலாணையில்
உதித்திட்ட ஓவியமே
இன்று உன் உடல்கள் குதறப்பட்டு
ஓரமாய் நிற்கிறாயோ
தமிழனின் தலைவிதியைப்போல
          நன்றி
திலகநாதன் கிந்துஜன்
Powered by Blogger.