சுன்னாகத்தில்,வாள்கள்,கோடரிகள் குற்றச்சாட்டில்இருவர் கைது!

சுன்னாகத்தில் வாள்கள், கோடரிகள் போன்ற ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில்
இருவர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட ஒருவரிடமிருந்து ஹெரோயினும்
கைப்பற்றப்பட்டதாகப் சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

தகவல் ஒன்றுக்கு அமைய சுன்னாகம் பிரதேசத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம்
இருந்து ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. அங்கிருந்த சிலர் தப்பியோடினர்.

சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் மேலுமொருவரும் கைது செய்யப்பட்டார். அவர்கள்
வழங்கிய தகலுக்கு அமைய கொக்குவில் பகுதியில் உள்ள கோவில் ஒன்றுக்கு மேல் மறைத்து
வைக்கப்பட்டிருந்த வாள்கள், கைக்கோடரிகள் மீட்கப்பட்டுள்ள என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

#Chunnakam  #jaffna  #srilanka  #Aava  #twoperson #tamilnews
Powered by Blogger.