தியாகி திலீபனின் நினைவிடத்தில் பிரபல தமிழ் நடிகர்!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் நடிகர் சதீஷ். அவரது டுவிட்டர் பக்கத்தை பார்த்தாலே தெரியும் எல்லோரையும் கலாய்த்தே தள்ளுவார்.

இவர் சமீபத்தில் இலங்கைக்கு சென்றுள்ளார். படப்பிடிப்பிற்காக சென்றாரா இல்லை சுற்றுலாவுக்கு அங்கு சென்றாரா என்ற மேலதிக தகவல்கள் தெரியவில்லை.

தவிர அங்கு போராடி உயிர்நீத்த திரு.திலீபன் அவர்களின் நினைவாக இருக்கும் இடத்திற்கு சென்று புகைப்படம் எடுத்துள்ளார்.

அந்த தகவலை நேற்றைய (26.09.2018) தினம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார்.

குறித்த பதிவு தற்போது வைரலாகி வருவதுடன், இவரின் இந்த செயலைக்கண்டு ஈழத்தமிழர்கள் நெகிழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

#sathish  #nallur_thileepan_place #thileepan  #jaffna #indian_actor

No comments

Powered by Blogger.