ஜேர்மனியில் தமிழர் தெருவிழா!

யேர்மனியின் டோட்முண்ட் மாநகரம் பல்லின மக்களையும் கலாச்சாரங்களையும் உள்ளடக்கிய பல்கலாச்சார நகரமாக விளங்கிவரும் நகரமாகும். இந்த மாநகரில் தாயகத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்த தமிழ்மக்களும் ஆயிரக்கணக்கில் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக வசித்து வருகின்றனர்.

அங்கு வசிக்கும் தமிழ்மக்கள் தங்களுக்குத் தேவையான தமிழ்ப் பாடசாலைகள், பல்பொருள் அங்காடிகள், உடுபுடவை நிலையங்கள், உணவுவிடுதிகள், உட்பட பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் யேர்மனியில் தமிழர்களின் வர்த்தக மையமாகவும் டோட்முண்ட் நகரமே விளங்குகின்றது.
தமிழ் மக்களின் முயற்சிகளுக்கு பல்வேறு வகைகளிலும் உதவிவரும் டோட்முண்ட் நகரம், இம்முறை தமிழ் வர்த்தகர்களின் முயற்சிகளுக்குக் கைகொடுத்து, வர்த்தகர்கள், மற்றும் கலைஞர்கள் இணைந்து வீதியில், ஒரு கலை விழாவுடன் வர்த்தகத்தினையும் மேற்கொள்ளும் தெருவிழா எனும் ஒரு பிரமாண்டமான விழாவினை நடாத்த ஒத்துழைப்பு வழங்கி வருகின்றது.
தெருவிழா என்பது யேர்மனிய மக்களால் கொண்டாடப்படும் மிகவும் பிரபல்யமான விழாவாகும். இவ்விழாவினை straßenfest எனும் பெயரில் ஒன்றுகூடி கொண்டாடி வருகின்றனர்.
முதல்முறையாகவே யேர்மனியில் வாழும் தமிழ் மக்களாலும் தெருவிழாவினைக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு வருவதனையும் அதனூடாக யேர்மனிய மக்களும் தமிழர்களின் கலை பண்பாடுகளுடன் , உணவுகள், உடுபுடவைகளையும், அறிமுகம் செய்யும் விழாவாகவும் இந்த விழா அமையவிருப்தையும் அறிகின்றோம்.

No comments

Powered by Blogger.