இலங்கை அரசின் நடவடிக்கைக்கைக்கு எதிராக இராமேஸ்வரம் மீனர்கள் போராட்டம்!

இலங்கை, படகுகளை அரசுடைமையாக்கும் சட்டத்தை எதிர்த்து இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராமேஸ்வரம் அனைத்து விசைப்படகுகள் மீனவர் சங்க கூட்டம் பொதுச் செயலாளர் என்.ஜே.போஸ் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, எரிபொருள் விலை உயர்வால் மீனவர்கள் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே படகுகள் மீன்பிடிக்க செல்வதற்கு தேவையான அளவு எரிபொருளை மானிய விலையில் வழங்க வேண்டும்.

மேலும், இலங்கை அரசு தற்போது புதிதாக இயற்றியுள்ள சட்டத்தின்படி, பிடிக்கப்படும் வெளிநாட்டு படகுகளை அரசுடைமையாக்கும் சட்டத்தை மீளப்பெற வேண்டும்.

கடந்த 28ம் திகதி பிடிபட்ட 3 படகுகள் உள்பட இலங்கை கடற்படையினரால் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ள 187 படகுகளை விடுவிக்க வேண்டும்.

முற்றிலும் சேதமடைந்த படகுகளுக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் இதன்போது நிறைவேற்றப்பட்டன.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் அனைத்து விசைப்படகு மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் என தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.