பாரிய நட்டத்தை சந்தித்துள்ள ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம்

2008 ஆம் ஆண்டு 8000 மில்லியன் ரூபா இலாபம் ஈட்டிய ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தை முன்னாள் அரசாங்கத்திடம் ஒப்படைத்த பின்னர் இதுவரையில் 20,000 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

வெலிமடையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி விசாரணைக்குழுவின் மீது ஊடகங்கள் கவனம் செலுத்துவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Powered by Blogger.