சமூக ஊடக நிறுவனங்கள் மீது விசாரணை செய்ய வெள்ளை மாளிகை உத்தரவு!

கூகுள், பேஸ்புக் போன்ற சமூக ஊடக நிறுவனங்களை விசாரணை செய்வதற்காக வெள்ளை மாளிகை உத்தரவு ஒன்றை தயாரித்து வருகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கையொப்பத்தைப் பெறுவதற்காக ப்ளூம்பர்க்ஊடகத்திடம் பேசுகையில் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகை உத்தரவு வரைவு ஒன்றைத் தயாரித்துள்ளது. இந்த உத்தரவின்படி, கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதள நிறுவனங்களின் தொழில் செயல்பாடுகள் குறித்து அரசு ஏஜென்சிகளை விசாரணை செய்யும்படி அறிவுறுத்தப்படும். இந்த உத்தரவு அதன் ஆரம்பகட்ட நிலையிலேயே உள்ளது. அரசு விசாரணை ஏஜன்சிகளுக்கு இன்னும் இந்த உத்தரவு அனுப்பப்படவில்லை என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர்
இணைய சமூக வலைதள நிறுவனங்கள் ஏதேனும் சட்ட விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளனவா என்பதை முழுமையாக விசாரிக்கும்படி அமெரிக்க அரசு அதிகாரிகளுக்கு இந்த உத்தரவு அறிவுறுத்துகிறது. எந்தவொரு குறிப்பிட்ட நிறுவனத்தின் பெயரும் இந்த உத்தரவில் குறிப்பிடப்படவில்லை. ஏற்கெனவே கூகுள், பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடக நிறுவனங்கள் பழைமைவாத மக்களின் குரல்களையும், இணைய செய்திகளையும் மறைப்பதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளிப்படையாகக் குற்றம்சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.