வெற்றிக்கு ‘ஸ்கெட்ச்’ போடும் இந்தியா!

ஓவல் மைதானத்தில் நடைபெற்றுவரும் 5ஆவது டெஸ்டில் இந்தியா டிராவுக்கான முயற்சியை விடுத்து, முடிவை
எதிர்நோக்கி ஆடிவருகிறது.
464 என்ற கடின இலக்கைத் துரத்திய இந்திய அணி 2 ரன்கள் எடுப்பதற்குள் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் கே.எல்.ராகுல்-ரஹானே ஜோடி விக்கெட்டை இழக்காமல் களத்தில் இருந்தனர். ஐந்தாம் டெஸ்டின் கடைசி நாளான இன்றும் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் தடுமாறிக் கொண்டிருந்தனர். ரஹானே நிதான ஆட்டத்தை கடைபிடித்தபோது, ராகுல் அதிரடியில் இறங்கினார். இந்த ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 118 ரன்கள் சேர்த்த நிலையில் 106 பந்துகளை எதிர்கொண்ட ரஹானே 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடந்து வந்த ஹனுமா விஹாரியும் (0) வந்த வேகத்தில் வெளியேறினார்.
ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் அதைப்பற்றி எல்லாம் ராகுல் கவலைப்படவில்லை. அவரது கவனம் முழுதும் பவுண்டரிகளின் மீதே இருந்தன. பென் ஸ்டோக்ஸ் வீசிய பந்தை பவுண்டரிக்கு விளாசிய ராகுல், டெஸ்ட் அரங்கில் தனது 5ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். இவருடன் ஜோடி சேர்ந்த ரிஷப் பந்த்தும் அதிரடியாக ஆடத் தொடங்கினார். உணவு இடைவேளையின்போது இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்திருந்தது.
சற்றுமுன்வரை இந்தியா 53 ஓவர்கள் விளையாடி 2 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்திருந்தது. ராகுல் 124 ரன்களுடனும், பந்த் 32 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.