காஷ்மீர் மனித உரிமை மீறல்கள் : ஐநா வருத்தம்!

காஷ்மீரில் நடந்து வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐநா அளித்த அறிக்கையின் மீது இந்திய அரசு
நடவடிக்கை எடுக்கவில்லை என ஐநாவின் மனித உரிமைக் கவுன்சில் வருத்தம் தெரிவித்துள்ளது.
சில நாட்களுக்கு முன்னதாக, ஐநாவின் மனித உரிமைக்கவுன்சில் முதன்முறையாக காஷ்மீரிலுள்ள மனித உரிமைகள் குறித்து நிலை அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது. இந்த அறிக்கையானது ஜீலை2017லிருந்து ஏப்ரல் 2018வரை காஷ்மீரில் நடந்த மனித உரிமை மீறல்களைக் கொண்டிருந்தது. இந்த அறிக்கையை இந்திய அரசு வன்மையாக மறுத்துள்ளது. அறி்க்கையை ஆட்சேபித்து ஐநாவின் மனித உரிமை ஆணையரிடம் இந்திய அரசு எதிர்ப்பை தெரிவித்துள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அறிக்கையில் தனி நபரின் பாரபட்சமான கருத்துகள் இடம் பெற்றுள்ளன இது ஐநாவின் நம்பகத்தன்மையை சீர்குலைப்பதாக உள்ளதாக ஆட்சேபனையில் கூறினோம் என்ற அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது மைக்கேல் பேச்லட் என்பவர் ஐநா மனித உரிமைக்கவுன்சிலின் புதிய ஆணையராக பதவி ஏற்றுள்ளார். அவர் பதவிக்கு வருவதற்கு முன்னதாக வெளியிட்ட காஷ்மீரில் மனித உரிமைகள் குறித்த கருத்தை பத்திரிகையாளர்களிடம பேசும்போது பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது அறிக்கையிலுள்ள மனித உரிமை மீறல்களை சரி செய்ய இந்திய அரசு ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.