‘களவாணி மாப்பிள்ளை’ தினேஷுக்கு ஜோடியான அதிதி மேனன்!

அட்டகத்தி’ திணேஷ் நடித்து வரும் ‘களவாணி மாப்பிள்ளை’ படத்தில் நாயகியாக நடிகை
அதிதி மேனன் நடித்துள்ளார்.
மறைந்த பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான மணிவாசகத்தின் மகன் காந்திமணிவாசகம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘களவாணி மாப்பிள்ளை’. இந்தப் படத்தின் நாயகனாக திணேஷ் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை அதிதி மேனன் நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் ஆனந்த்ராஜ், தேவயாணி, ரேணுகா, மனோபாலா, மகாநதி சங்கர், மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த், ஜோதி, லல்லு, கிரேன் மனோகர், நாஞ்சில் விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ராஜபுஷ்பா பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 
இதற்கு முன் இந்த நிறுவனம் ‘நம்ம ஊரு பூவாத்தா’, ‘ராக்காயி கோயில்’, ‘பெரிய கவுண்டர் பொண்ணு’, ‘கட்டபொம்மன்’, ‘நாடோடி மன்னன்’, ‘மாப்பிள்ளை கவுண்டர்’ உட்பட 16 சூப்பர் ஹிட் படங்களை தயாரித்தது குறிப்பிடத்தக்கது. இந்த அனைத்து படங்களையும் ராஜபுஷ்பா பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் மறைந்த மணிவாசகம்தான் தயாரித்து இயக்கியிருந்தார். 
தற்போது 17 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜபுஷ்பா பிக்சர்ஸ் பட நிறுவனம் ‘களவாணி மாப்பிள்ளை’ என்ற படத்தை தயாரித்து வருகிறது. இந்தப் படத்தை மணிவாசகத்தின் மகனான காந்திமணிவாசகம் தயாரித்து, இயக்குகிறார்.

No comments

Powered by Blogger.