எனக்கான மாப்பிள்ளையை பார்த்தவுடன் திருமணம் - சதா!

திருமணம் செய்து கொள்ள எனக்கு ஏற்ற மாதிரி நபர் இன்னும் கிடைக்கவில்லை என்று நடிகை சதா கூறியுள்ளார்.
மும்பையைச் சேர்ந்த நடிகை சதா, ஜெயம் ரவிக்கு ஜோடியாக தமிழில் ‘ஜெயம்’ என்ற படத்தின் மூலம் மூலம் நாயகியாக அறிமுகமானார்.அதையடுத்து அவர் தமிழில் ஒரு சில படங்களில் நடித்தார். ஆனால் தெலுங்கிலும், கன்னடத்திலும் பல படங்களில் நடித்துள்ளார். இந்தியிலும் அவர் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். பின்னர் ஒரு கட்டத்தில் அவர் சினிமாவை விட்டு காணாமல் போனார்.
தற்போது ‘டார்ச்லைட்’ என்ற படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார் நடிகை சதா. இந்த படத்தில் அவர் விலை மாதுவாக நடித்துள்ளார். இந்த படம் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. 
இந்நிலையில் நடிகை சதா சமீபத்திய அளித்த பேட்டியில், தனக்கு 34 வயதாகியும் ஏன் இன்னும் திருமணம் ஆக வில்லை என்ற காரணத்தை விளக்கியுள்ளார். “எனக்கு குணத்துக்கு ஏற்ற மாதிரி, நான் விரும்பும்படியான ஆண்கள் யாரும், என் வாழ்க்கையில் இன்னும் வரவில்லை. அந்த மாதிரியான ஆண் மகனை சந்திக்கும் போது என் திருமணம் குறித்து யோசிக்கலாம்” என்றார் சதா.

No comments

Powered by Blogger.