கடற்கரும்பு​லிகள் மேஜர் கண்ணாளன்,மேஜர் நகுலன் உட்பட்ட ஆறு மாவீரர்களி​ன்23ம் ஆண்டு நினைவு நாள்!

புல்மோட்டைக் கடற்பரப்பில் காவியமான கடற்கரும்புலிகள் மேஜர் கண்ணாளன், மேஜர் நகுலன் உட்பட்ட நான்கு மாவீரர்களினதும், மட்டக்களப்பு மாவட்டத்தில் காவியமான இரு மாவீரர்களினதும் 23ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
03.09.1995 அன்று புல்மோட்டைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிப் படகினை மூழ்கடித்து,

1.கடற்கரும்புலி மேஜர் கண்ணாளன்

(விநாயகம் இளையதம்பி - புதுக்குடியிருப்பு,  மட்டக்களப்பு)

2.கடற்கரும்புலி மேஜர் நகுலன்

(கந்தையா கிருஸ்ணதாஸ் - காரைநகர், யாழ்ப்பாணம்)

3.கப்டன் பூவேந்தன்

(வாரித்தம்பி ஜெயக்குமார் - தாளையடி, யாழ்ப்பாணம்)

4.கப்டன் செங்கண்ணன்

(சிவஞானம் சிவநேசன் - கொழும்புத்துறை, யாழ்ப்பாணம்) ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

இதேநாள் மட்டக்களப்பு மாவட்டம் திருக்கணாமடுப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற மோதலில்,

1.வீரவேங்கை ஜீவகுமார்

(சித்திரவேல் உதயகுமார் - சித்தாண்டி, மட்டக்களப்பு)

குடும்பிமலைப் பகுதியில் ஏற்பட்ட வெடிவிபத்தில்

2.கப்டன் சிறிதாசன்

(புவனேசசிங்கம் வேதாரணியம் - கொக்கட்டிச்சேலை, மட்டக்களப்பு) ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

No comments

Powered by Blogger.