கொடி­கா­மம் பேருந்து நிலை­யம் – ஏ9 வீதி­யு­டன் இருக்­க­ வேண்­டும்!

கொடி­கா­மம் பொதுச்­சந்தை புதிய மாதி­ரிப் பொதுச் சந்­தை­யாக அமைக்­கும்­போது கொடி­கா­மம் பேருந்து நிலை­யத்தை ஏ9 முதன்­மைச் சாலை­யு­டன் இணைந்­தி­ருக்­கும் வகை­யில் அமைக்­கப்­ப­டல் வேண்­டும்’ கொடி­கா­மம் பொதுச் சந்­தையை புதிய வடி­வில் அமைப்­ப­தற்­கென உரு­வாக்­கப்­பட்ட வரை­ப­டத்தை இறு­தி­யாக்­கு­வது தொடர்­பாக சாவ­கச்­சேரி பிர­தேச சபை மண்­ட­பத்­தில் அண்­மை­யில் நடை­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லில் கலந்து கொண்­டோ­ரால் தெரி­விக்­கப்­பட்­டது.

பிர­தேச சபைத் தவி­சா­ளர் க.வாம­தே­வன் தலை­மை­யில் அண்­மை­யில் நடை­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லில் பிர­தேச சபை எல்­லைக்­குட்­பட்ட பகு­தி­க­ளில் உள்ள பொது அமைப்­புக்­க­ளின் பிர­தி­நி­தி­கள், வட­ம­ராட்சி கிழக்கு மரு­தங்­கேணி பிர­தேச செய­லர் க.கன­கேஸ்­வ­ரன், பிர­தேச சபை உப­த­வி­சா­ளர் செ.மயூ­ரன், உறுப்­பி­னர்­கள், அலு­வ­லர்­கள் எனப் பல­ரும் கலந்து கொண்­ட­னர்.

‘கடந்த 2000ஆம் ஆண்­டுக்­குப் பின்­னர் கொடி­கா­மம் சந்தை அப­ரி­மி­த­மான வளர்ச்சி கண்டு வரு­வ­தால் மக்­க­ளின் தேவை­க­ளைக் கருத்­தில் கொண்டு கடைத் தொகு­தி­கள் சந்தை விற்­ப­னைப் பிரி­வு­கள் போன்­றவை அமைக்­கப்­ப­டல் வேண்­டும்.

இவற்­றின் வளர்ச்­சிக்கு உறு­து­ணை­யாக்க தற்­போது கொடி­கா­மம் பேருந்து நிலை­யம் அமைந்­துள்ள இடத்­திற்கு சந்­தை­யின் தேங்­காய் விற்­ப­னைப் பிரிவு மற்­றும் கட­லு­ண­வு­கள் விற்­ப­னைப் பிரி­வு­களை மாற்றி பேருந்து நிலை­யத்தை ஏ- 9 முதன்­மைச் சாலை­யு­டன் இணைந்த நிலை­யில் அமைக்­கப்­ப­டு­வது கட்­டா­ய­மாக உள்­ளது’ என கலந்­து­ரை­யா­ட­லுக்கு வருகை தந்­தி­ருந்­த­வர்­க­ளால் மேலும் தெரி­விக்­கப்­பட்­டது.

மக்­க­ளின் ஆலோ­சை­ன­கள் கருத்­தில் எடுக்­கப்­பட்டு சந்தை அமைக்­கப்­ப­டு­மென தவி­சா­ளர் க.வாம­தே­வன் தெரி­வித்­தார். 

No comments

Powered by Blogger.