போர்க் குற்­ற­வா­ளி­களை காப்­பாற்ற இட­ம­ளி­யோம் -ரெலோ

போர்க் குற்­ற­வா­ளி­களை, அர­சி­யல் கைதி­க­ளு­டன் இணைத்து அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஐக்­கிய நாடு­கள் சபை­யில் யோசனை ஒன்றை முன்­வைக்­க­வுள்­ளார்.
இந்த விட­யத்­தில் எந்­தப் பேரத்­துக்­கும் தமி­ழர் தரப்­புத் தயா­ராக இல்லை. போர்க் குற்­ற­வா­ளி ­க­ளைக் காப்­பாற்ற வேண்­டும் என்று நினைத்­தால் அது வெறும் பகல் கனவே. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் சார்­பாக இதைக் கூறு­கின்­றேன்.

இவ்­வாறு ரெலோ அமைப்­பின் செய­லா­ளர் நாய­கம் என்.சிறி­காந்தா தெரி­வித்­தார்.

ரெலோ அமைப்­பின் மத்­திய குழுக் கூட்­டம் நேற்று யாழ்ப்­பா­ணம் வை.எம்.சி. மண்­ட­பத்­தில் நடை­பெற்­றது. அதில் உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.அவர் தெரி­வித்­த­தா­வது,

அர­சி­யல் கைதி­க­ளின் விடு­தலை தொடர்­பாக உள்­நாட்­டி­லும், புலம்­பெர் நாட்­டுத் தரப்­பு­க­ளா­லும் தொடர்ச்­சி­யா­கக் கோரிக்கை விடுக்­கப்­பட்டு வரு­கின்­றது. அண்­மைக்­கா­ல­மாக இந்­தப் பிரச்­சினை தீவிர நிலையை எட்­டி­யுள்­ளது. அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வும் அது தொடர்­பாக ஐக்­கிய நாடு­கள் சபை­யில் அறி­விப்­பொன்றை வெளி­யி­ட­வுள்­ளார் என்று கூறப்­பட்­டுள்­ளது.

நடந்து முடிந்த போரில் இரா­ணு­வத்­தா­லும், துணைக் குழுக்­க­ளா­லும் மேற்­கொள்­ளப்­பட்ட பன்­னாட்­டுச் சட்­டங்­க­ளுக்கு முர­ணாக, மனித உரி­மை­க­ளுக்கு முர­ணா­கச் செயற்­பட்­ட­னர் என்று கூறப்­ப­டும் போர் குற்­ற­வா­ளி­க­ளை­யும், அர­சி­யல் கைதி­க­ளை­யும் இணைத்து ஒரு யோச­னையை மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்­வைக்­க­வுள்­ளார் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. அது தொடர்­பில் தெளி­வு­ப­டுத்த வேண்­டிய கட்­டா­யத் தேவை எமக்கு உள்­ளது.

நாம் அங்­கம் வகிக்­கும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு போர்க் குற்­றங்­க­ளில் ஈடு­பட்­ட­வர்­கள் தொடர்­பில் முழு­மை­யான விசா­ரணை நடத்த வேண்­டும் என்­ப­தில் உறு­தி­யாக உள்­ளது. இந்த விட­யத்­தில் நாம் எந்­தச் சம­ர­சத்­துக்­கும் போக­மாட்­டோம். மிக­வும் கெட்­டித்­த­ன­மாக – இரா­ஜ­தந்­திர ரீதி­யில் போர்க்­குற்­ற­வா­ளி­க­ளைப் பாது­காப்­ப­தற்­காக அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன அரசு இந்த யோச­னையை முன்­வைக்­கும்­போது தமிழ் இனம் முழு­மூச்­சாக அதை எதிர்க்­கும்.

போர்க் குற்ற விசா­ரணை நடந்­தே­யாக வேண்­டும்.நாம் அர­ச­மைப்­புத் திருத்­தத்­தி­லும் பல முக்­கிய விட­யங்­களை வலி­யு­றுத்தி வரு­கின்­றோம். வடக்கு, கிழக்கு சுயாட்சி, உயர் அதி­கா­ரங்­கள் என்­ப­வற்­றைக் கோரு­கின்­றோம். சம உரி­மை­யு­ட­னான தீர்வை வலி­யு­றுத்­து­கின்­றோம். நாம் மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­க­ளைத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு மீற முடி­யாது.

போர் குற்­றங்­க­ளில் ஈடு­பட்ட கதா­நா­ய­கர்­க­ளைக் காட்­டிக் கொடுக்க முடி­யாது என்று கூறும் இந்த அரசு தமிழ் மக்­க­ளின் நிலைப்­பாட்­டை­யும் புரிந்­து­கொள்ள வேண்­டும். அர­சி­யல் கைதி­கள் வேறு, போர்க் குற்­ற­வா­ளி­கள் வேறு என்­ப­தை­யும் புரிந்­து­கொள்ள வேண்­டும். போர்க் குற்­ற­வா­ளி­க­ளைக் காப்­பாற்ற முயன்­றால் அது வெறும் பகல் கன­வா­கவே முடி­யும் என்­பதை ஆணித்­த­ர­மா­கக் கூறு­கின்­றேன்.- என்­றார்.

No comments

Powered by Blogger.