மடுவில் வறட்சி தாண்டவம்!

மன்னார் மாவட்டம் மடு பிரதேசத்தில் வறட்சியால் கிணறுகள் பல வற்றியுள்ளன. அவற்றுள் குப்பைகள், சருகுகள்தான் காணப்படுகின்றன. பயிர்கள் வாடியும் காய்ந்தும் அழிந்துகொண்டிருக்கின்றன என்று கவலை தெரிவிக்கப்படுகிறது.

மடு பிர­தேச செய­ல­கப்­பி­ரி­விற்கு உட்­பட்ட பாலன்­பிட்டி தொடங்கி கீரி­சுட்­டான இரண இலுப்­பக்­கு­ளம் உட்­பட பத்­துக்­கும் மேற்­பட்ட கிரா­மங்­கள் கடும் வறட்­சி­யால் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. சிறு குளங்­கள் மட்­டு­மன்றி பெரிய குளங்­க­ளும் தண்­ணீ­ரின்றி உள்­ளன. கிண­று­க­ளும் தண்­ணீர் இல்­லா­மல் நிலம் தெரிய வறண்டு போயுள்­ளன. அத­னால் பிர­தேச மக்­கள் குடிப்­ப­தற்­கும், பிற பாவ­னைக்­கும் தண்­ணீர் வசதி இல்­லாது அவ­திப்­ப­டு­கின்­ற­னர்.

வீடு­க­ளில் வளர்க்­கும் கால்­ந­டை­க­ளுக்­கும், பழ வகை, மரம் செடி­கள் போன்­ற­வற்­றுக்­கும் தண்­ணீர் கிடை­யாது. ஒவ்­வொரு வீட்­டுக் காணி­க­ளி­லும் காணப்­ப­டும் மரங்­கள், செடி­கள் நெருப்­பில் எரிக்­கப்­பட்­டவை போன்று காட்­சி­ய­ளிக்­கின்­றன.

சென்ற வரு­டம் பரிசு பெற்ற வீட்­டுத்­தோட்­டங்­கள் இந்த வரு­டம் பாலை­வ­ன­மாக மாறிக்­கொண்­டி­ருக்­கி­றன என்று பிர­தேச மக்­கள் கூறு­கின்­ற­னர்.

வீட்­டுக்கு வீடு அதிக தூரம் காணப்­ப­டு­வ­தால் நீர்த் தாங்­கி­கள் மூல­மா­கத் தண்­ணீர் தரு­வ­தை­வி­டுத்­துக் குழாய்க் கிணற்று வச­தி­களை ஏற்­ப­டுத்­தி­னால் குடி­தண்­ணீ­ரு­டன் எமது வாழ்­வா­தா­ரத்தை மேம்­ப­டுத்த உத­வி­யாக இருக்­கும் என்று அந்த பிர­தேச மக்­கள் தெரி­விக்­கின்­ற­னர்.

“வறட்­சி­யால் மன்­னார் மாவட்­டத்­தில் மடு­பி­ர­தேச மக்­கள்தான் மிக­வும் மோச­மாக பாதிக்­கப்­பட்­டுள்­ள­னா். வறட்சி நிவா­ர­ணம் மிக விரை­வில் மக்­க­ளுக்கு வழங்­கப்­ப­டும்” என்று மடு பிர­தேச செய­லா­ளர் ஜெய­க­ரன் தெரி­வித்­தார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.