கொலைச் சதி விவ­கா­ரத்தை திசை திருப்ப- இந்­தியா முயற்சி!

அரச தலை­வர் மற்­றும் கோத்­த­பாய ராஜ­பக்ச கொலைச் சதித் திட்­டத்தை அரசு சாதா­ர­ண­மாக எடுக்­கக் கூடாது. நாட்­டின் தேசி­யத் தலை­வர்­கள் கொல்­லப்­பட்ட வர­லாறு உள்­ளது. சந்­தே­கத்­தின் பேரில் கைது செய்­யப்­பட்­ட­வர் மன­நிலை பாதிக்­கப்­பட்­ட­வர் என்ற இந்­தி­யத் தூத­ர­கத்­தின் அறி­விப்பு விசா­ர­ணை­யைத் திசை திருப்­பும் திட்­ட­மா­க­வும் இருக்­க­லாம்.

இவ்­வாறு தெரி­வித்­துள்­ளார் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் திலங்க சும­தி­பால.

சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் மாற்று அணி­யின் செய்­தி­யா­ளர் சந்­திப்பு நேற்­று­முன்­தி­னம் கொழும்­பில் நடை­பெற்­றது. அதில் கருத்­துத் தெரி­வித்­த­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.
அவர் தெரி­வித்­ததாவது-;

அரச தலை­வர் மற்­றும் கோத்­த­பாய ராஜ­பக்ச ஆகி­யோ­ரைக் கொலை செய்­யச் சதித் திட்­டம் மேற்­கொள்­ளப்­பட்­டமை தொடர்­பாக விசா­ர­ணை­கள் நடை­பெ­று­கின்­றன என்று தெரி­விக்­கப்­பட்­ட­போ­தும், அது தொடர்­பாக அச­மந்­தப் போக்கே காணப்­ப­டு­கின்­றது.

இந்­தச் சதித் திட்­டத்­தின் பின்­புலத்தில் பொலிஸ் மா அதி­பர், பிர­திப் பொலிஸ் மா அதி­பர் அர­சி­யல் பின்­னணி இருக்­கு­மாக இருந்­தால் இவ்­வாறு கொண்டு செல்ல முடி­யாது.

இந்­தச் சதித் திட்­டம் தொடர்­பான விசா­ர­ணை­யில் எவ்­வா­றான முடி­வு­கள் வெளி­வ­ரும் என்ற அச்­சத்­தில் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யி­னர் உள்­ள­னர். இந்­தச் சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­பட்­டி­ருக்­கும் பிர­திப் பொலிஸ் மா அதி­பர் நாலக்க சில்வா பொலிஸ்மா அதி­ப­ரின் நெருங்­கிய நண்­ப­ராக இருக்­கின்­றார்.

பொலிஸ் மா அதி­பர் தலைமை அமைச்­ச­ருக்கு மிக­வும் நெருக்­க­மாக இருக்­கின்­றார். அத­னால் கொலைச் சதித் திட்­டம் தொடர்­பில் சாதா­ர­ண­மா­கக் கரு­தா­மல் பரந்­த­ள­வி­லான விசா­ர­ணை­களை மேற்­கொள்­வது நாட்­டின் பாது­காப்புக்கு நல்­ல­தா­கும்.

சதித்­திட்­டம் தொடர்­பாக முறை­யான விசா­ரணை இடம்­பெற்­றால் தலைமை அமைச்­சர் மற்­றும் பொலிஸ்மா அதி­பர் சிக்­கிக்­கொ ள்­வார்­கள். சந்­தே­கத்­தின் பேரில் கைது­செய்­யப்­பட்­டி­ருக்­கும் இந்­தி­யர் மன­நிலை பாதிக்­கப்­பட்­ட­வர் என இந்­தி­யத் தூத­ர­கம் தெரி­வித்­தி­ருக்­கின்­றது.

இந்த அறி­விப்­பும் விசா­ர­ணையை திசை திருப்­பும் செய­லா­க­வும் இருக்­க­லாம். அத­னால் கொலைச் சதித்­திட்­டம் தொடர்­பான விசா­ரணை முறை­யாக இடம்­பெ­ற­வேண்­டு­மாக இருந்­தால் சட்­டம் ஒழுங்கு அமைச்சை விசா­ரணை முடி­வுக்கு வரும்­வ­ரைக்­கே­னும் அரச தலை­வர் தனக்கு கீழ் கொண்­டு­வ­ர­வேண்­டும் – என்­றார்.

No comments

Powered by Blogger.