இந்த நாட்டில் இது வரலாற்றில் முதல் தடவை: மகிந்த

இந்த நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக வழக்குத் தொடர்வது
குறித்து தீர்மானம் எடுப்பது சட்ட மா அதிபர் அல்லவெனவும், அமைச்சர் குழுவொன்றே எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
இரவில் அமைச்சர்கள் குழுவொன்று கூடி சட்ட மா அதிபருக்கு பணிப்புரை விடுப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
ஒரு குறிப்பிட்ட குழுவைப் பழிவாங்குவதற்கென விசேட நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கவலைவெளியிட்டார்.
சிறையிலுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பிரணாந்துவை பார்வையிடச் சென்ற போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

No comments

Powered by Blogger.