இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ள இலங்கை அணி

ஆசிய கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டியில் இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு
தெரிவாகியுள்ளது.
இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ஹொங்கொங் அணியை வீழ்த்தியதன் மூலம் இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
ஹொங்கொங் அணியை 55 – 46 என்ற அடிப்படையில் இலங்கை அணி வீழ்த்தியுள்ளதுடன், இந்தத் தொடரில் இலங்கை அணி ஒரு போட்டியிலும் தோல்வியை சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிய கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டிகள் சிங்கப்பூரில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்தத் தொடரில் இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் அணிகள் அமெரிக்காவில் நடைபெற உள்ள உலக கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டியில் பங்குபற்றவுள்ளமை கூறத்தக்கது
Powered by Blogger.