மைத்திரி – மகிந்தவை இணைக்க முயற்சி?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவையும் ஒன்றிணைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 15 பேர் அணியின் முக்கியஸ்தர்கள் சிலரும் மற்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை சேர்ந்த முக்கியஸ்தர்கள் சிலரும் இது தொடர்பாக விசேட கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரவு செலவு திட்டத்திற்கு முன்னர் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை அரசாங்கத்திலிருந்து விலகச் செய்து இவர்கள் இருவரையும் இணைத்து புதிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கான திட்டங்களே முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக இரண்டு குழுவினரும் மைத்திரிபால சிறிசேன மற்றும் மகிந்த ராஜபக்‌ஷவுடன் சந்திப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.