யாழில் இருந்து கதிர்காமம் சென்ற பேரூந்தில் பயணித்தவர் வவுனியாவில் கைது!

யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமம் நோக்கி சென்ற பேரூந்தில் கேரளா கஞ்சாவினை கொண்டு சென்ற நபர் ஒருவரை வவுனியா பொலிஸார் நேற்று இரவு (29.09) கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் யாழில் இருந்து கதிர்காமம் நோக்கிச் சென்ற பேருந்தை நொச்சிமோட்டை பகுதியில் வழிமறித்து சோதனை மேற்கொண்ட போது அப் பேருந்தில் பயணித்த மொனராகலையை சேர்ந்த 34 வயதுடைய நபர் ஒருவர் 2 கிலோ கிராம் கேரளா கஞ்சாவை உடமையில் வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து குறித்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.