முப்­ப­டை­யி­னரின் உள்ளகத் தகவலை – மறைக்க முயலும் மைத்திரி

கடந்த ஆட்­சிக் காலத்­தில் நடந்த கொலை மற்­றும் காணா­மல் ஆக்­கப்­பட்ட சம்­ப­வங்­கள் தொடர்­பாக நீதி­மன்­றத்­துக்­குத் தேவைப்­ப­டும் முப்­ப­டை­யி­ன­ரின் உள்­ள­கத் தக­வல்­களை  வழங்க வேண்­டாம் என்று அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன உத்­த­ர­விட்­டுள்­ள­தா­கத் தக­வல்­கள் வெளி­யா­கி­யுள்­ளது.

மாண­வர்­கள் காணா­மல் ஆக்­கப்­பட்ட வழக்­கில் முதன்­மைச் சந்­தே­க­ந­ப­ரைக் காப்­பாற்­றிய குற்­றச்­சாட்­டில் குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வி­ன­ரால் கைது செய்­யப்­ப­ட­வுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­ப­டும் கூட்­டுப் படை­க­ளின் தலைமை அதி­காரி ரவி விஜ­ய­கு­ண­வர்­தன முன்­னி­லையே, அரச தலை­வர் மைத்­தி­ரி­பால இந்­தத் தக­வலை வெளி­யிட்­டுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கின்­றது.

கொழும்­பில் உள்ள அரச தலை­வ­ரின் இல்­லத்­தில் அண்­மை­யில் நடந்த கலந்­து­ரை­யா­ட­லில் இந்த உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கின்­றது.
இந்­தக் கலந்­து­ரை­யா­ட­லில், பாது­காப்பு அமைச்­சின் செய­லர் கபில வைத்­தி­ய­ரட்ன, சட்­டம் ஒழுங்கு அமைச்­சின் செய­லர், முப்­ப­டைத் தள­ப­தி­கள், அரச புல­னாய்வு சேவை­க­ளின் பிர­தானி, இரா­ணு­வப் புல­னாய்­வுப் பிரிவு பிர­தானி, பொலிஸ்மா அதி­பர், குற்­றப் புல­னாய்­வுப் பிரிவு பிர­தானி, நிதி மோசடி விசா­ர­ணைப் பிரி­வின் பிர­தானி உள்­ளிட்ட பலர் கலந்து கொண்­டுள்­ள­னர்.

ஊட­க­வி­ய­லா­ளர்­கள் லசந்த விக்­ர­ம­துங்க கொலை, பிர­கீத் எக்­னெ­லி­கொட காணா­மல் ஆக்­கப்­பட்­டமை, கீத் நொயார், உபாலி தென்­ன­கோன் ஆகி­யோர் தாக்­கப்­பட்­டமை மற்­றும் 11 இளை­ஞர்­கள் கடத்­திச் செல்­லப்­பட்டு காணா­மல் ஆக்­கப்­பட்­டமை போன்ற சம்­ப­வங்­க­ளு­டன் படை­யி­ன­ருக்­குத் தொடர்பு இருப்­ப­தா­கக் குற்­றம் சுமத்­தப்­ப­டு­கி­றது.

இந்­தச் சம்­ப­வங்­கள் தொடர்­பான விசா­ர­ணை­களை நடத்தி வரும் பொலி­ஸா­ருக்கு, விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துச் செல்ல இரா­ணு­வத்­தின் உள்­ளக தக­வல்­கள் தேவைப்­ப­டு­கி­றது. இது குறித்து நீதி­மன்­றங்­க­ளுக்­குத் தெரி­யப்­ப­டுத்­திய பின்­னர், நீதி­மன்­றங்­கள் விவ­ரங்­களை வழங்­கு­மாறு படைத் தள­ப­தி­க­ளுக்கு உத்­த­ர­விட்­டி­ருந்­தது.

பல்­வேறு கார­ணங்­க­ளைக் கூறி, தக­வல்­களை படைத் தள­ப­தி­கள் வழங்­க­வில்லை. இந்­தத் தக­வல்­களை வழங்­கு­மாறு கோரி, குற்­றப் புல­னாய்வு திணைக்­க­ளம் இரா­ணு­வத் தள­ப­திக்கு கடி­தத்­தை­யும் அனுப்­பி­யி­ருந்­தது. இரண்டு வாரங்­க­ளுக்கு முன்­னர், பொலி­ஸார், பாது­காப்பு அமைச்­சின் செய­லர் கபில வைத்­தி­ய­ரத்­ன­வி­ட­மும் இது தொடர்­பில் கோரிக்கை விடுத்­தி­ருந்­த­னர். இந்­தத் தக­வல்­களை வழங்­கு­வது தேசிய பாது­காப்­புக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்­தும் எனக் கூறப்­பட்­டுள்­ளது.

இரா­ணுவ அதி­கா­ரி­கள் கைது செய்­யப்­பட்­டுள்­ளமை தொடர்­பில் அரச தலை­வர் தனது அதி­ருப்­தியை பொலிஸ்மா அதி­ப­ரி­டம் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளார்.

இந்த அதி­கா­ரி­கள் சாட்­சி­யங்­கள் இன்றி கைது செய்­யப்­பட்­டுள்­ள­தா­க­வும் அவர்­க­ளில் சில­ரி­டம் வாக்­கு­மூ­லங்­கள் கூட பெறப்­ப­ட­வில்லை என­வும் அரச தலை­வர் குறிப்­பிட்­டுள்­ளார். இதற்­குப் பதி­ல­ளித்­துள்ள பொலிஸ்மா அதி­பர், நீதி­மன்­றங்­க­ளின் உத்­த­ர­வுக்கு அமை­யவே இரா­ணு­வத்­தி­ன­ரி­டம் தக­வல்­கள் கோரப்­பட்­டுள்­ள­தா­க­வும் கைது செய்­யப்­பட்ட அனை­வ­ரி­ட­மும் வாக்­கு­மூ­லங்­கள் பெறப்­பட்­டுள்­ள­தா­க­வும் சில­ரி­டம் பல முறை வாக்­கு­மூ­லங்­கள் பெறப்­பட்­ட­தா­க­வும் கூறி­யுள்­ளார்.

எவ­ரும் வெறு­மனே கைது செய்­யப்­ப­ட­வில்லை என­வும் குற்­றங்­க­ளு­டன் சம்­பந்­தப்­பட்­டுள்­ள­னர் என்று திருப்­தி­ய­டைய கூடிய தக­வல்­கள் கிடைத்­துள்­ளமை கார­ண­மா­கவே கைது செய்­யப்­பட்­டி­ருப்­ப­தா­க­வும் பொலிஸ்மா அதி­பர், அரச தலை­வ­ரி­டம் கூறி­யுள்­ளார்.

#srilanka    #tamilnews  #maithiri  #army

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.