விக்னேஸ்வரனுக்கு பதில் வழங்கப்படுமாம்??

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் தனது பக்க நியா­யங்­க­ளைப் பட்­டி­யல்­ப­டுத்­தி­யுள்­ளார். மறு­பக்க நியா­யங்­களை நாம் முன்­வைக்­க­வேண்­டும். அதனை அவ­ச­ரப்­பட்­டுச் செய்ய முடி­யாது. விக்­னேஸ்­வ­ரன் முன்­வைத்த கருத்­துக்­களை அலசி, ஆற அமர இருந்து ஆராய்ந்து உரிய நேரத்­தில் பதில் வழங்­கு­வேன்.

இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார்.

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தமிழ் மக்­கள் பேர­வை­யின் பணி­ம­னைத் திறப்பு விழா­வில் உரை­யாற்­றும்­போது, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­மைத்­து­வம் தோல்­வி­ய­டைந்து விட்­ட­தா­கத் தெரி­வித்­தி­ருந்­தார்.

அத்­து­டன் அர­சி­ய­லில் தனக்கு முன்­பாக 4 தெரி­வு­கள் இருப்­ப­தா­க­வும் கூறி­யி­ருந்­தார். இது தொடர்­பில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நிலைப்­பாடு என்ன என்­ப­தைக் கேட்­ட­போதே சம்­பந்­தன் மேற்­கண்­ட­வாறு பதி­ல­ளித்­தார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது, விக்­னேஸ்­வ­ரனை வடக்கு முத­ல­மைச்­ச­ரா­கக் கள­மி­றக்­கி­யது தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு. முத­ல­மைச்­சர் வேட்­பா­ள­ரா­கக் கள­மி­றக்கி அவரை முத­ல­மைச்­ச­ராக்­கி­யது வரை­யில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு மாத்­தி­ரம்­தான் பங்­க­ளிப்­புச் செய்­தது என்­பதை அவர் கவ­னத்­தில் கொள்­ள­வேண்­டும்.

இந்த நிலை­யில் கூட்­ட­மைப்­பின் தலை­மையை விமர்­சித்து அவர் தனது பக்க நியா­யங்­களை மாத்­தி­ரம் முன்­வைத்­துள்­ளார். மறு­பக்க நியா­யங்­களை நாம் முன்­வைக்­க­வேண்­டும். அதனை நாம் அவ­ச­ரப்­பட்டு முன்­வைக்க முடி­யாது. ஆற அமர்ந்து அவர் முன்­வைத்து கருத்­துக்­களை அலசி ஆராய்ந்து தக்க நேரத்­தில் உரிய பதிலை வழங்­கு­வேன் – என்­றார்.

#sampanthan   #srilanka   #jaffna    #tamilnews  #c.v.vickeneswaran

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.