வரலாறு காணாத வகையில் ரூபாய் மதிப்பிழந்துள்ளது - கூட்டு எதிர்க்கட்சி

இலங்கையில் வரலாற்றில் கடந்த மூன்று வருடங்கள் மற்றும் ஒரு வாரத்திற்குள் ஏற்பட்டுள்ள ரூபாயின் மதிப்பிழப்பானது எந்த காலத்திலும் ஏற்பட்டதில்லை என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் ஆட்சிக்காலத்தில் போர் நடைபெற்ற சூழலிலும் ரூபாயின் மதிப்பு இந்த அளவுக்கு பாரியளவில் வீழ்ச்சியடையவில்லை.

அரசாங்கம் ரூபாயின் பெறுமதியை அழித்துள்ளது. ரூபாயின் பெறுமதி குறைந்துள்ளதால், நாட்டின் கடன் தொகை அதிகரித்துள்ளது எனவும் டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி 8 நாட்கள் கடந்துள்ளன.

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி இந்த திட்டத்தின் சூத்திரதாரி, இந்த திட்டம் பாதாள உலக குழுவின் மூலம் செயற்படுத்தப்படவிருந்தது.

பாதாள உலக குழு மற்றும் பொலிஸ் இடையில் ஒருங்கிணைப்புகளை பொலிஸ் மா அதிபர் மேற்கொண்டுள்ளார். இந்த கொலை முயற்சி திட்டத்தில் மூன்று பேர் பற்றி பேசப்படுகிறது.

ஜனாதிபதி, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை கொலை செய்வது அதன் மூலம் பிரதமரின் செல்வாக்கை உயர்த்த முயற்சிப்பது ஆகிய இந்த சதித்திட்டத்தில் பேசப்பட்டுள்ளது.

இந்த மூன்று பேரும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட உள்ளதாக சமூகத்தில் பேசப்பட்டு வரும் நபர்கள். இவர்கள் மூவரில் இருவரை கொலை செய்வதன் மூலம் ஒரு தரப்புக்கு நன்மை ஏற்படும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விடயம் சம்பந்தமாக காட்டும் அக்கறை தொடர்பாகவும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது எனவும் டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.

#Dullas Alahapperuma #Colombo #Press Meet

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.