இலங்கை தெற்காசியாவில் முதலிடம்!

ஐக்கிய நாடுகள் மனித வள அபிவிருத்தி சுட்டெண் தரப்படுத்தலில் தெற்காசியாவில் இலங்கை முதலிடத்தை பிடித்துள்ளது. 189 நாடுகளில் இலங்கைக்கு 76ஆவது இடம் கிடைத்துள்ளது.

இலங்கையை தவிர ஏனைய தெற்காசிய நாடுகள் பின்வரிசையில் இருப்பதுடன் இலங்கைக்கு அடுத்ததாக மாலைதீவு 101 இடத்தில் உள்ளது.

இதேவேளை, 1990ஆம் ஆண்டு 2017ஆம் ஆண்டு வரை இலங்கையின் மனித வள அபிவிருத்தியானது 23.2 வீதமாகும்.

சுகாதாரம், கல்வி மட்டுமல்லாது தேசிய மட்டத்தில் பெறப்பட்டுள்ள வருவாய் சம்பந்தமான விடயமும் பாராட்டப்பட்டுள்ளது.

மனித வள அபிவிருத்தி தொடர்பான சுட்டெண் தரப்படுத்தலில் நோர்வே நாட்டுக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

சுவிஸர்லாந்து, அவுஸ்திரேலியா, அயர்லாந்து மற்றும் ஜேர்மனி என்பன அடுத்தடுத்த வரிசையில் இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி வேலைத்திட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.