மெய்ப்பட விடியும் நாடு!

முறமெடுத் துயர்ந்த புலியழித் தெழுந்த
 பாட்டுடை போர்க்கள நாடு
வகை வகை வெற்றி வாசலில் விளைந்த
வலிமை கொள் வானுயர் இனமே
தகமை கொள் வீரம் பூட்டியவிலங்கை
உடைப்பது நவில்கிறேன் கேள்மின்

பெருதிசை யாவிலும் பொருதியஈனர்
திகைத்தொளித்தோடிய பகைவர்
திசை பட நொருக்கிய கணையின்
அசைவினை முடக்கிய வீரம்  பகை கரத்தினை மடக்கிய பெருந்தணல் தீரம்

அடலினை ஏறிய சுர பிடரியில் பிடித்திடு
உடலினை முறித்திட நேர்ந்தும் பகை
மனதினை நினைந்தொரு கணையினில்
கொன்றவன் பரிதியை மடக்கிய வேகம்

வகையறு கைவேல் கலங்களை நொறுக்கி
களத்திடை வீழ்த்திய போரில்
அசைவுறு உடலும் அங்கத்தினொடு
உயிர் அகற்றியே
 களமது  சரியும்

விடியலின் உரத்தை விதையென எடுத்து
  வீசியே வைத்தவர் மண்ணில்
கரத்தினை கொடுங்கள் கவலையை
 போக்கி நிலத்தினில் விடியும்  நாடு.....
.....

..........கவிப்புயல் சரண்........

No comments

Powered by Blogger.