தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தில் இரத்ததானம்!

தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் உறுப்பினர்களினால் இரத்ததானம் வழங்கப்பட்டுள்ளது.

நல்லூர் கந்தன் ஆலயத்தின் பின்பக்கத்தில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில் நினைவு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்ற நிலையிலேயே இன்றைய தினம்(ஞாயிற்றுக்கிழமை) இரத்ததானம் வழங்கப்பட்டுள்ளது.

இதன் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அரசியல் பிரதிநிதிகள், கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் இரத்ததானத்தை வழங்கியுள்ளனர்.

இதேவேளை, தியாக தீபம் திலீபனின் நினைவு வாரத்தில் இவ்வாறான பல சமூக பணிகள் பல்வேறு தரப்பினராலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.