பிரித்தானியாவில் ஈழத்துப் பெண் சாதனை!

இலங்கையில் பிறந்து பிரித்தானியாவில் பொப் பாடகராக புகழ்பெற்றுள்ள மாயா அருள்பிரகாசத்தின் வாழ்வில் நடந்த சம்பவங்களை விளக்கும் ஆவணப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு மூன்று பெயர்கள். மாதங்கி, மாயா, மியா என்ற மூன்று பெயர்களுக்கும் வெவ்வேறு பின்னணிகள் காணப்படுகின்றன.

மாதங்கி – அவரது தமிழ் பின்னணியை நினைவூட்ட, மாயா – அவர் லண்டனில் வளர்ந்ததைக் குறிக்க, மியா – அவர் ஒரு மேடைப்பாடகி, ஆவணப்படம் எடுப்பவர், பிரித்தானிய பொப்பிசையில் இடம்பெறுபவர், சமாதான ஆர்வலர், அமெரிக்க பொழுதுபோக்கு நிகழ்வுகளை விமர்சிப்பவர் என பல காரணங்களை குறிப்பதற்காக அமைந்துள்ளது.

இளம் பருவத்தை இலங்கையில் செலவிட்ட மாயாவின் தந்தை இலங்கை சிவில் யுத்தத்துடன் தொடர்புடையவர் என்பதுடன், ஈழப்போராட்டத்தின் ஆரம்பகாலத்தின் முக்கியஸ்தரும் என்பதால், லண்டனுக்கு இடம்பெயர்ந்து செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.

தற்போது தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படம், அகதிகளின் கதையை, மாயாவின் அகதிக் கதையை சித்தரிக்கின்றது. அவர் எப்படி தனது வாழ்க்கையை தொடர்கிறார் என்பதை இந்த ஆவணப்படம் தெளிவாக விளக்குகிறது.

இந்த ஆவணப்படத்தின் முக்கியத்துவத்தை, மாயாவும் இந்தப் படத்திலேயே விபரிக்கிறார்.

“நான் என் பாடல்களில் அகதிகளின் கதையை சொல்ல விரும்புகிறேன். ஏனென்றால், அதைத்தான் நான் என் பாடல்கள் மூலம் தெரியப்படுத்த விரும்புகிறேன்” என கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.