நயன்தாராவிடம் தோற்ற விக்னேஷ்!

நடிகை நயன்தாராவுடன், விக்னேஷ் சிவன் இணைந்து விளையாடும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் கவனம் பெற்று வருகிறது.
நானும் ரவுடிதான் படத்திற்குப் பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன் தாரா இருவரும் நெருங்கிய நண்பர்களானார்கள். இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. இந்த தகவலை இதுவரை இருவரும் ஏற்கவோ மறுக்கவோ இல்லை.
இருவரும் வெளிநாடுகளுக்கு ஒன்றாக செல்வது சினிமா விழாக்களில் கலந்து கொள்வது என வெளிப்படையாக இருந்து வருகின்றனர். சமீபத்தில் கலிஃபோர்னியாவில் நடைபெற்ற இசைநிகழ்ச்சி ஒன்றில் இருவரும் ஒன்றாகக் கலந்து கொண்டனர். மேலும் தனியார் நிகழ்ச்சி ஒன்றில், விருது வழங்கும் மேடையில் “வருங்கால கணவருக்கு நன்றி” என்று நடிகை நயன்தாரா பேசியிருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன், குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள பொற்கோவிலில் இருவரும் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் வைரலானது.
இந்நிலையில் சமீபத்தில் தனது 34-வது பிறந்தநாளைக் கொண்டாடிய விக்னேஷ் சிவன், நயன்தாராவுடன் வெகேஷன் சென்றுள்ளார். அப்போது இருவரும் பேக்மேன் ஸ்மாஷ் கேம் விளையாடியுள்ளனர்.  இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் 1050 புள்ளிகளை நயன்தாரா பெற்றுள்ளார். 700 புள்ளிகளைப் பெற்ற விக்னேஷ் சிவன் நயன்தாராவிடம் தோல்வி அடைந்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலான கவனத்தை பெற்று வருகிறது.

No comments

Powered by Blogger.