‘Night School’ இவ்வார பொக்ஸ் ஒபிஸில் முதலிடத்தை பிடிக்கும் என எதிர்பார்ப்பு!

ரிஃவானி ஹட்டிஷ் மற்றும் கெவின் ஹாட் ஆகியோர் நோர்த் அமெரிக்கன் வீக்கென்ட் பொக்ஸ் ஒபிஸில் முதலிடத்தை பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவர்கள் இருவரும் நடித்து வெளியாகியுள்ள நகைச்சுவை திரைப்படமான ‘Night School’ இந்த வாரம் வீக்கென்ட் பொக்ஸ் ஒபிஸில் முதலிடத்தை பிடிக்கும் என நம்பப்படுகின்றது.

திரைப்படத்தில் ஹட்டிஸ் இரவு நேர பாடசாலை ஒன்றின் ஆசிரியராகவும் கெவின் ஹாட் மாணவனாகவும் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வார இறுதியில் 30 மில்லியன் அமெரிக்க டொலரை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுபோன்றே அனிமேற்றட் திரைப்படமான ‘Smallfoot’ டிக்கட் விற்பனையில் 22.5 மில்லியன் டொலர்களை வசூலித்து இந்த வாரம் இரண்டாவது இடத்தை பெற்றுக் கொள்ளும் என நம்பப்படுகின்றது.

கடந்த வாரம் முதலிடத்தை பெற்றிருந்த ஜக் பிளாக் மற்றும் இரண்டு தடவை ஒஸ்கார் விருதை வென்றிருந்த கேற் பிளான்ஷெட் ஆகியோர் நடித்து வெளியாகிய ‘The House With A Clock In Its Walls’ இந்தவாரம் மூன்றாவது இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திரைப்படம் 14.3 மில்லியன் அமெரிக்க டொலரை வசூலிக்கும் எனவும் நம்பப்படுகின்றது.

அதுபோன்றே கடந்த வாரம் இரண்டாவது இடத்திலிருந்த ‘A Simple Favor’ டிக்கட் விற்பனை மூலம் 6.7 மில்லியன் அமெரிக்க டொலரை வசூலிக்கும் என்ற எதிர்பார்ப்புடன் இந்தவாரம் நான்காவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

ஐந்தாவது இடத்தில் புதிய வரவான ”Hell Fest’ 5.6 மில்லியன் டொலர் எதிர்பார்ப்புடன் இடம்பிடித்திருக்கிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.