பெருந்தோட்ட கம்பனிகளுக்கு எதிராக போராட்டம்!

பெருந்தோட்ட கம்பனிகளுக்கு எதிராக எதிர்வரும் 23ஆம் திகதி ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கபோவதாக அமைச்சர் பழனி திகாம்பரம் எச்சரித்துள்ளார்.

தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் நலன் சார்ந்த உரிமைகளை வலியுறுத்தியே இந்த போராட்டத்தை முன்னெடுக்க போவதாக அவர் கூறியுள்ளார்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தோட்ட தலைவர்களுக்கு கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் விளக்கமளிக்கும் நிகழ்வு இன்று(சனிக்கிழமை) ஹட்டனில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#srilanka  #palani   #Thikamparam  tamilnews  #mounten_workers

No comments

Powered by Blogger.