முதல்வர் பதவி கிடைக்காததால் பன்னீர் செல்வம் விரக்தியுடன் உள்ளார்:!

முதல்வர் பதவி கிடைக்காத காரணத்தினால் தமிழகத்தின் துணை முதலமைச்சரான ஓ.பன்னீர் செல்வம் தற்போது விரக்தியுடன் காணப்படுகிறார் என அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) தஞ்சையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

“ஓ.பன்னீர் செல்வம் ஆட்சியை காப்பாற்றுவதற்காக மனநலம் பாதிக்கப்பட்டவர் போல பேசிக்கொண்டிருக்கின்றார். மேலும் அவர் பேசுவதில் எந்ததொரு உண்மையும் இல்லை என்பது மக்களுக்கு நன்றாக தெரியும்.

இவர் இதற்கு முன்னர் தி.மு.க.வுடன் இணைந்து கொண்டு இந்த ஆட்சிக்கு எதிராக வாக்களித்தார். பின்னர் டெல்லியில் இருந்து உத்தரவு வந்தவுடன் இந்த ஊழல் ஆட்சியுடன் சேர்ந்து கொண்டு ‘துணை முதல்வர்’பதவியை தற்போது வகித்து வருகின்றார்.

இவ்வாறு பன்னீர் செல்வம் செயற்பட்டு விட்டு இன்று என்னை சதி செய்தேன் என்று கூறுகிறார். இதை யாரும் நம்ப மாட்டார்கள். அவரது குடும்பமே முதலில் அதனை நம்பாது” என தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

#india   #tamilnews   #tamilnadu  #thinakkaran 
Powered by Blogger.