போதநாயகி மரணக் குற்றவாளியை கைது செய்யுமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

கிழக்கு பல்கலைக்கழக பெண் விரிவுரையாளரின் மரணத்துடன் தொடர்புடைய சூத்திரதாரி கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

கிழக்கு பல்கலைக்கழகத்தில் கடமையாற்றிய வவுனியா – ஆசிக்குளம், கற்குளம் பகுதியைச் சேர்ந்த 29 வயதான நடராசா போதநாயகி என்ற பெண் விரிவுரையாளர் கடந்த 21ஆம் திகதி திருகோணமலை கடற்கரை பகுதியிலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது

#pothi  #senthuran  #batticalo   #trincomale  #vavuniya  #tamilnews #deth_women

No comments

Powered by Blogger.