பொங்கு தமிழ் பேரணியில் சர்வதேச வானொலிகள் ஓரணியாக இணைந்து நடாத்தும் சிறப்பு நேரலை

.இலங்கையின் கொடிய அரசின்  இனவழிப்புக்கு நடவடிக்கைக்கை நீதி கோரியும் சர்வதேசத்துக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கத்துடனும் நாளை (17.09.2018 ) சுவிஸ்லாந்து நாட்டின்
ஜெனீவா நகரில் அமைந்துள்ள ஈகத்தியாகி முருகதாசன் திடலில் ஏற்பாடாகியுள்ள பொங்குதமிழ் நிகழ்வுகளை நேரலையாக உங்கள் இல்லங்களுக்கு வானலையாக கொண்டு வருவதற்கு அனைத்துலக உயிரோடைத்தமிழ் வானொலி இம்முறை சர்வதேச வானொலிகளான அவுஸ்திரேலியாவில் இயங்கும் தாயகம், கனடாவில் இயங்கும் கனேடியத்தமிழ் வானொலி மற்றுத் நோர்வேயில் இயங்கும் தமிழ்முரசம் வானொலி ஆகியவற்றுடன் இணைந்து செயலாற்ற தயாராக இருக்கிறது.

எமது வானொலிகளின் அறிவிப்பாளர்கள் நேரடியாக களத்தில் இருந்து நேரலையில் இணைய, பிரதான கலையகத்தில் இருந்து ஒலிபரப்பு தொடரும் இவ்வொலிபரப்பு ஏனைய வானொலிகளினூடாகவும் ஒலிபரப்பப்படுவதற்கு ஏற்பாடுகள் நடந்துள்ளன. இவ்வொலிபரப்புக்களை அவுஸ்திரேலிய நேரம் 22.00-2.00,கனடா நேரம் 8.00-12.00, மற்றும் ஐரோப்பிய நேரம் 14.00 - 18.00 வரை கேட்கலாம். ஜெனிவாவின் முருகதாசன் திடலில் என்ன நடக்கின்றது என்பதை வானொலியினூடாக செய்திகளாக்க நாம் தயாராக உள்ளோம் அறிந்து கொள்ள நீங்களும் தயாராகுங்கள். அதை விட நேரடியாக வந்து பங்கெடுங்கள் எமக்கான நீதியை நாமே தட்டிக் கேட்போம்.

“ஒன்றிணைவோம் உரிமை கேட்போம்”

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.