ரயில் கட்டணங்கள் நாளை முதல் அதிகரிப்பு

ரயில் கட்டணங்கள் நாளை முதலாம் திகதி முதல் 15 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளது.

எவ்வாறாயினும் இந்த கட்டண அதிகரிப்பின் போது ஆரம்ப கட்டணமான 3ஆம் வகுப்புக்குறிய 10 ரூபா கட்டணம் , 2ஆம் வகுப்புக்குறிய 20 ரூபா கட்டணம் , முதலாம் வகுப்புக்குறிய 40 ரூபா கட்டணங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஆரம்ப கட்டணம் தவிர்ந்த மற்றைய கட்டணங்கள் 15 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளது. 

No comments

Powered by Blogger.