சம்பந்தனுக்கு எதிராக திருகோணமலையில் சுவரொட்டிகள்!

எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிராக திருகோணமலை நகரின் பல இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வீரம், மானம், தேசியத்தில் உறுதி, பாசம் எல்லாவற்றுக்கும் தலைகீழான ஒருவரே சம்பந்தன் என அந்த சுவரொட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது

இன்று பிற்பகல் இளைஞர்கள் சிலரினால் திருகோணமலை நகர்பகுதி மற்றும் எதிர்கட்சி தலைவரின் இல்ல வளாகத்திலும் பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மை நாட்களில் முல்லைத்தீவு - வவுனிய மாவட்டங்களில் நாடளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

இவ்வாறான நிலையில், தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிராக இன்று திருகோணமலையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.