வாள்வெட்டுக் குழுக்களை கட்டுப்படுத்த இராணுவமாம்?

வடக்கில் செயற்படும் சட்டவிரோத குழுக்களை கட்டுப்படுத்தற்கு இராணுவத்திற்கு அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வது குறித்து அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டி - தலதா மாளிகைக்கு இன்று முற்பகல் சென்றிருந்த இராணுவத் தளபதியிடம், யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத குழுக்களை கட்டுப்படுத்த இராணுவத்தினருக்கு அதிகாரம் அவசியம் என யாழ்ப்பாண மாவட்ட கட்டளைத் தளபதி அண்மையில் தெரிவித்திருந்ததை குறிப்பிட்ட ஊடகவியலாளர்கள், அந்த குறித்த அதிகாரத்தைப் பெற்றுக்கொடுக்க கவனம் செலுத்தப்பட்டுள்ளதா என இராணுவத் தளபதியிடம் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்துள்ள இராணுவத் தளபதி, “இது குறித்து பாதுகாப்பு சபை மற்றும் புலனாய்வு பிரிவின் கலந்துரையாடல்களின் போதும் கலந்துரையாடப்படும்.

குறித்த விடயம் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக தீர்மானத்தை மேற்கொண்டு குறிப்பிட்ட சில அதிகாரங்களை வரையறுக்கப்பட்ட காலத்திற்கு மட்டும் வழங்கினால் அதனை தம்மால் சரியாக செயற்படுத்த முடியும்” என்றும் இராணுவத் தளபதி கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.