நாயாறில் எரிக்கப்பட்ட வாடிகளை த.தே.ம.முன்னனி மீள அமைக்கும் பணியில்!

முல்லைத்தீவு நாயாறில் அண்மையில் எரிக்கப்பட்ட வாடிகளை மீள அமைக்கும் பணிகள் இன்றைய தினம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியால் தொடங்கப்பட்டது.

இந் நிலையில் வாடி அமைப்பதற்கு மரம் வெட்டுவதற்கு பிரதேச செயலகம் மற்றும் வனவளத் திணைக்களத்தில் 2 கிழமைக்கு முன்னர் அனுமதி கோரப்பட்டபோது அது 2 கிழமை இழுத்தடிப்புக்கு பின் மறுக்கப்பட்டுள்ளது.  அங்கே சிங்கள இனத்தவர்கள்  வாடி அமைக்கும் போது சிறிலங்கா  படையினர் காட்டுக்குள் சென்று 2 டிராக்டர் மரங்களை எதுவித அனுமதியில்லாமல் வெட்டிக்கொண்டு வந்து கொடுத்ததாக அங்கேயுள்ள மக்கள் சொல்லுகின்றனர்.

இதனால்  செலவு மேலதிகமாக 250,000 இனால் கூடியுள்ளது.

எமது தேவைக்கு எமது வளங்களையே பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் எமது வளங்கள் தொடர்ச்சியாக அன்னிய சக்திகளால் சுரண்டப்பட்டு வருகிறது என்பதற்கு இதுவும் ஒரு சான்று.


#mullaithivu #T.N.P.F #srilanka #jaffna #tamilnews
Powered by Blogger.