ஈருருளிப்பயணிகள் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கான மனு கையளிப்பு!

தமிழின அழிப்புக்கு பரிகார நீதியை வேண்டி பிரித்தானியாவில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் 3 வது நாளாக இன்றைய தினம் நெதர்லாந்தில் உள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தை வந்தடைந்தது. ஈருருளிப்பயணத்தை முன்னெடுக்கும் மனிதநேய பணியாளர்களை நெதர்லாந்து செயற்பாட்டாளர்கள் வரவேற்று அவர்களுக்கான ஆதரவை வழங்கினார்கள். அத்தோடு அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கான மனுவை காவல் உயர் அதிகாரிகளின் ஊடாக வழங்கப்பட்டது. நெதர்லாந்து வெளிவிவகார அமைச்சர் மனிதநேய பணியாளர்களை நேரடியாக சந்திப்பதற்கு வாய்ப்பு இல்லாத வேளையிலும் மின்னஞ்சல் ஊடாக இவ்வாறான மனித நேய பணிக்கு தனது வாழ்த்துக்களை அனுப்பியது குறிப்பிடத்தக்கது.Powered by Blogger.