தஞ்சையில் இளம்பெண்ணை கடத்திய திருநங்கை..!

தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள ஒட்டங்காடு ஊராட்சி , மதன்பட்டவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவதாஸ். இவரது மனைவி காந்திமதி.

சம்பவத்தன்று சுமார் 30 வயது மதிக்கத்தக்க திருநங்கை ஒருவர், காந்திமதியின் கால் வலிக்கு நாட்டு வைத்தியம் பார்ப்பதாக கூறி அவரது வீட்டிற்கு வந்துள்ளார். இரவு நேரம் ஆனதால், திருநங்கை காந்திமதி வீட்டிலேயே தங்கி விட்டார்.

மறுநாள் அதிகாலையில் வீட்டில் தூங்கிய திருநங்கையும், காந்தி மதியின் மகள் அதிர்ஷ்டமேரியும் (வயது21) காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த காந்திமதி பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் அவர்கள் 2 பேரையும் காணவில்லை.

இந்த நிலையில், திருநங்கை விட்டுச் சென்ற செல்போன் சிம்கார்டை பரிசோதனை செய்து பார்த்த போது திருநங்கையின் படமும் அவரது பெயர் முனியம்மா என்பதும் தெரியவந்தது. அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்?என்ற விவரம் தெரியவில்லை.

இந்த சம்பவம் குறித்து காந்திமதி திருச்சிற்றம்பலம் போலீசில் புகார் செய்தார். திருச்சிற்றம்பலம் போலீசார் வழக்கு பதிவு செய்து அதிர்ஷ்டமேரியை கடத்தி சென்ற திருநங்கை முனியம் மாவை தேடி வருகிறார்கள்.

#Thanjavur #tamilnadu #tamilnews

No comments

Powered by Blogger.