அரசியலமைப்பில் அதிகாரப் பகிர்வை வழங்க வேண்டும்-தவநாதன்!

பகிர்வை வழங்க வேண்டும், வட மாகாணத்துக்கான முழுமையான தேவை பகுப்பாய்வு அறிக்கை தயாரிக்கப்படல் வேண்டும், நில அபகரிப்பு இல்லாமல்
மகாவலி நீர் வடக்கிற்கு வர வேண்டும், இனங்களுக்கிடையே நல்லிணக்கம் ஏற்படும் வரை வடமாகாணத்திற்கு வெளியே உள்ள மக்களை திட்டமிட்டு குடியேற்றுவதை நிறுத்த வேண்டும் என வட மாகாணசபை உறுப்பினர் வைத்தியநாதன் தவநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜப்பானிய தூதரக அரசியல் விவகாரப் பிரிவின் ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை அதிகாரியான யுனா மயெகாவா நேற்று மாகாணசபை உறுப்பினர் வை.தவநாதன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போதே மாகாணசபை உறுப்பினர் தவநாதன் குறித்த விடயங்களை சுட்டிக்காட்டினார்.

சமகால சமூக பொருளாதார அரசியல் விடயங்கள் தொடர்பான பல விடயங்களையும் குறிப்பாக அரசினால் ஏற்படுத்தப்பட்ட காணாமல் போனோர் அலுவலகம், நஷ்டஈட்டு பணியகம், நல்லிணக்கப் பொறிமுறை மற்றும் புதிய அரசியலமைப்பு முயற்சிகள் போன்றவற்றின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் யுனா மயெகாவா அவர்கள் கேட்டறிந்து கொண்டார்.

#kilinochchi  #tamilnews #thavnanthan  #epdp  #watter  #japan

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.