யாழ் நல்லூரில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தியாகி திலீபனின் 31ம் ஆண்டு நினைவேந்தல்(படங்கள்.காணொளி)

தியாகி திலீபனின் 31ம் ஆண்டு நினைவேந்தல் நல்லூர் ஆலய வீதியில் உள்ள திலீபனின் நினைவுதூபி முன்பாக இன்று காலை உணர்வுபூர்வமாக தமிழ் தேசிய மக்கள் முண்ணனி குழுமத்தின் ஏற்ப்பாட்டில் நடைபெற்றது.

இன்று26.09.2018 காலை 10 மணிக்கு பருத்துறை வீதியில் உள்ள திலீபனின் நினைவுதூபியில் நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பமானது. தமிழ் தேசிய மக்கள் முண்ணனி உறுப்பினர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் என பல நூற்றுக்கணக்கானவர்கள் ஒன்று திரண்டனர். இதனை தொடர்ந்து தென்மராட்சி பகுதியில் இருந்து தூக்கு காவடி எடுத்து
வந்த இரு இளைஞர்கள் தியாகி திலீபனுக்கு அஞ்சலியை செலுத்தினர். அதனை தொடர்ந்து 10.48 மணிக்கு தியாகி திலீபன் உயிர்நீத்த அந்த நேரத்தில்,நல்லூர் வடக்கு வீதியில் உண்ணாநோன்பு இருந்து உயிர்நீத்த அந்த இடத்தில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து மீண்டும் பருத்துறை வீதியில் உள்ள தியாகி திலீபனின் நினைவு தூபியில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது. 

#nallur #Thileepan #jaffna #T.N.F.P

No comments

Powered by Blogger.