சாவகச்சேரி நிதி நிறுவனத்தில் கொள்ளை பெண் உட்பட 3 பேர் கைது.!

யாழ்.சாவகச்சேரியில் நிதி நிறுவனம் ஒன்றுக்குள் புகுந்து கத்தி முனையில் இடம்பெ ற்ற 18லட்சம் ருபாய் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எ-9 வீதி சாவகச்சேரி நகர் பகுதியில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் கடந்த 19ஆம் திகதி புதன்கிழமை காலை வழமைபோல  பணிகளை ஆரம்பித்த பணியாளர்கள், பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த 18 இலட்சத்து 91 ஆயிரத்து 21 ரூபா பணத்தினை வங்கியில் வைப்பிலிடுவதற்காக எடுத்துள்ளனர்.

இதன்போது கத்தியோடு உள்நுழைந்த கொள்ளையர் ஒருவர், அங்கிருந்தோரை அச்சுறுத்தி பணத்தினை கொள்ளையிட்டு சென்றார் என்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

“நிதி நிறுவனத்தின் காசாளரான பெண் பணியாளர் ஒருவரால் திட்டமிட்டு இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றது என விசாரணைகள் மூலம் தெரியவந்தது.

அது தொடர்பில் யாழ்ப்பாணம் – நல்லூர் அரசடிப் பகுதியைச் சேர்ந்த அந்தப் பெண் பணியாளரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அதனடிப்படையில் அவரது இரண்டு நண்பர்களே கொள்ளையிடுவதற்கு நிதி நிறுவனத்துக்கு வந்துள்ளனர்.

அவர்களில் ஒருவர் நிதி நிறுவனத்துக்குள் கத்தியுடன் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டார் என்று தெரியவந்தது.

அதனடிப்படையில் நிதி நிறுவனத்தின் பெண் பணியாளர் உள்பட மூவர் இன்று காலை கைது செய்யப்பட்டனர்” என்று பொலிஸார் தெரிவித்தனர். 
Powered by Blogger.