தொப்பையை குறைக்க நினைப்பவர்கள் கவனத்திற்கு!

ரொம்ப நாளா உடற்பயிற்சி செய்தும் தொப்பை இன்னும் குறையலையா? எல்லாவிதமான டயட் முறையையும் முயற்சி செய்தும் எந்த பலனும் இல்லையா? அப்ப கட்டாயம் இத படிங்க. மனிதனோட உடம்புல வயிற்று பகுதில தான் எளிதில் கொழுப்பு சேரும்.

ஆனா அத கரைகிறது அவ்ளோ ஈஸி இல்ல. அளவுக்கு அதிகமா சாப்பிடறதால மட்டும் தொப்பை உருவாவதில்லை. இதற்கு வேற சில காரணங்களும் இருக்கு.
ஒருத்தர் அதிக மனஅழுத்தத்திற்கு ஆளாகும் போது அவங்க உடம்புல Cortisol அப்படிங்கிற ஒரு ஹார்மோன் சுரக்கும், இந்த ஹார்மோன் வயிற்று பகுதில கொழுப்பு சேருவதை அதிகப்படுத்தும்.

இதேபோல உணவுல அதிக அளவு உப்பு சேர்த்துகிறது, நார்ச்சத்து குறைவான உணவுகள சாப்பிடுவது, நீண்ட நேரம் ஒரே இடத்துல உக்கார்ந்து இருக்கிறது போன்றவையும் வயிற்று பகுதில கொழுப்பு சேகரமாவதை அதிகப்படுத்தி தொப்பையை உண்டாக்கும்.

அதனால தொப்பையை குறைக்கிறதுக்கு முன்னாடி மேல சொன்ன விஷங்கள தவிர்த்திங்கனா, சீக்கிரமே தொப்பைய குறைச்சிடலாம். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.