முதிரை மரக்குற்றிகளை கொண்டு சென்ற இருவர் விளக்கமறியலில்!

திருகோணமலை சூரியபுர பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி முதிரை மரக்குற்றிகள் 37 யை கொண்டு சென்ற இருவரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் தெரிவித்துள்ளார்.

பொலிஸார், கந்தளாய் நீதிமன்ற நீதவான் துசித்த தம்மிக்க முன்னிலையில் குறித்த நபர்களை இன்று ஆஜர்படுத்திய போதே அடுத்த மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர்கள் சேருநுவர பகுதியிலிருந்து கந்தளாயிக்கு அனுமதிப்பத்திரமின்றி டிப்பர் வாகனமொன்றில் 37 முதிரை மரக்குற்றிகளை கொண்டு சென்ற போதே இவ்வாறு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் பயன்படுத்திய டிப்பர் வாகனமும், முதிரை மரக்குற்றிகளையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சேருநுவர மற்றும் சமகிபுர பகுதியைச் சேர்ந்த 28, மற்றும் 40 வயதுடைய இருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

#trincomalee   #tamilnews  #kanthalay
Powered by Blogger.